search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்"

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை- மகள் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55) விவசாயி.

    இவர் தனது மகள் பிரசன்னா (18)வுடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் துத்திப்பட்டு வழியாக சேதராப்பட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது துத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தில் பரமசிவம் மற்றும் அவரது மகள் பிரசன்னா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை இடையர் பாளையம் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சோபன் பாபு (வயது 33). வக்கீல். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆண்டவர் (28) என்பவருடன் வழக்கு சம்பந்தமாக திருப்பூர் கோர்ட்டுக்கு சென்றார்.

    வேலை முடிந்ததும் 2 பேரும் இரவு கோவைக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை சோபன் பாபு ஓட்டி வந்தார். இரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் சோபன்பாபு, ஆண்டவர் ஆகியோர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் சோபன்பாபு பரிதாபமாக இறந்தார். ஆண்டவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×